உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் சுற்றுச்சாலை சேதம்

ராமேஸ்வரம் சுற்றுச்சாலை சேதம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் நகராட்சி சுற்றுச்சாலை குண்டும், குழியுமாக சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.ராமேஸ்வரம் நகராட்சி ஜல்லிமலைத் தெரு கிழக்கு பகுதியில் சிமெண்ட் சுற்றுச்சாலை உள்ளது. இச்சாலை வழியாக வாகனத்தில் காட்டுபிள்ளையார் கோவில்தெரு, பெரியார் நகர், கெந்தமாதன பர்வதம் கிராமத்திற்கு செல்ல முடியும். விழா, விடுமுறை நாளில் ராமேஸ்வரம் கோயிலுக்கு அதிக பக்தர்கள் வரும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதனை தவிர்க்க இத்தெரு மக்கள் இந்த சுற்றுச்சாலையை பயன்படுத்துகின்றனர். சமீபத்தில் பெய்த கனமழையால் இச்சாலையில் மழைநீர் தேங்கி பல இடங்களில் சேதமடைந்து குண்டும், குழியுமாக கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்கி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ