உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இலங்கை கடற்படை கெடுபிடியால் முடங்கிய ராமேஸ்வரம் மீனவர்கள்

இலங்கை கடற்படை கெடுபிடியால் முடங்கிய ராமேஸ்வரம் மீனவர்கள்

ராமேஸ்வரம்,:மீன் பிடிக்க கடலுக்குள் செல்லும் போது இலங்கை கடற்படையினரின் கெடுபிடி செய்வதால் ராமேஸ்வரம் மீனவர்கள் அச்சத்தில் மீன்பிடிக்க செல்லாமல் வீடுகளில் முடங்கினர். ராமேஸ்வரத்தில் 570 விசைப்படகுகளில் 5000 மீனவர்கள் நேரடியாகவும், 30 ஆயிரம் பேர் மீன்பிடி சார்பு தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்தாண்டு மீன்பிடி தடைக்காலம் முடிந்து ஜூன் 15 முதல் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் நிலையில் அன்று முதல் தற்போது வரை இலங்கை கடற்படையினர் துப்பாக்கியை காட்டி அவர்களை விரட்டியடிப்பது தொடர்கிறது. மீனவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதும் தொடர்கிறது. இலங்கை கடற்படையினரின் கைது மற்றும் 1 முதல் 2 ஆண்டு வரை இலங்கை நீதிமன்றம் விதிக்கும் சிறை தண்டனைக்கு பயந்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதை தவிர்த்து வீடுகளில் முடங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் 129 விசைப்படகுகளில், அதுவும் சிறிய ரக படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். மீதமுள்ள 441 படகுகளை கரையில் நிறுத்தி விட்டு மீனவர்கள் வீடுகளில் இருந்தனர். மீன்பிடிக்கச் சென்ற 129 படகுகளின் மீனவர்கள் இந்திய எல்லைக்குள்ளேயே மீன்பிடித்து விட்டு நேற்று கரை திரும்பினார்கள். இதில் 80 சதவீதம் படகுகளில் மீன்வரத்தின்றி மீனவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இந்நிலை நீடித்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கடனில் சிக்கும் அவலம் ஏற்படும் என மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை