உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் கட்டுமானப்பணிகள் மந்தம்

ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் கட்டுமானப்பணிகள் மந்தம்

ராமேஸ்வரம்:பாம்பன் புதிய ரயில் பாலம் திறக்கப்பட உள்ள நிலையில் ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரம் பணிகள் உட்பட கட்டுமானப்பணிகள் தொடந்து மந்தமாக நடக்கிறது.பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணி முடிவடைந்த நிலையில் திறப்பு விழாக்காக காத்திருக்கிறது. நவ.13, 14ல் ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் சவுத்ரி ஆய்வுக்கு பின் சில குறைகளை சுட்டிக்காட்டினார். அவற்றை ரயில்வே பொறியாளர்கள் சரி செய்த பின் புதிய ரயில்வே குழுவினர் பாம்பன் பாலத்தில் ரயில் இன்ஜின் சோதனை நடத்தி ஆய்வு செய்து ரயில்வே அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பினர். இதனால் ஜன.30க்குள் பாம்பன் பாலத்தை திறப்பதற்கு வாய்ப்பு உள்ளது என ரயில்வே பொறியாளர்கள் தெரிவித்தனர்.இந்நிலையில் ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் 1 முதல் 4 வரை உள்ள பிளாட்பாரம், கூரைகள் மறு சீரமைக்க, பயணிகளுக்கு கழிப்பறை அமைக்க இரு மாதங்களுக்கு முன் பணிகள் துவங்கியது. ஆனால் பணி மந்தமாக நடக்கிறது.ஜனவரியில் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து துவங்கினால் பயணிகள் பாதிக்கப்படுவர். எனவே இப்பணிகளை விரைவாக முடிக்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ