மேலும் செய்திகள்
ரேஷன் கடை கவலைக்கிடம் புதிதாக அமைக்க கோரிக்கை
22-Oct-2024
ரெகுநாதபுரம் : திருப்புல்லாணி அருகே பத்திராதரவையில் ரேஷன் கடை கட்டடம் திறக்கக் கோரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.கடந்த 1997ல் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டடம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதால் கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. தற்காலிகமாக கிராமத்தில் உள்ள கலையரங்க கட்டடத்தில் ரேஷன் கடை செயல்படுகிறது. இதனால் மழைக் காலங்களில் பொருள்களை உரிய முறையில் பாதுகாக்க முடியாமல் விற்பனையாளர்கள் திணறுகின்றனர். இதையடுத்து கடந்த ஓராண்டிற்கு முன்பு ரூ.11.8 லட்சத்தில் ரேஷன் கடை கட்டடம் கட்டப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டடம் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் கிராம மக்கள் உள்ளனர். ஊராட்சி துணைத்தலைவர் வி.அழகர் கூறியதாவது: ஊராட்சிக்கு சொந்தமான கலையரங்க கட்டடத்தில் எவ்வித பாதுகாப்பும் இன்றி ரேஷன் உணவு பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. இங்கு 400 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். புதிய கட்டடம் ஓராண்டாக திறக்கப்படாமல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. எனவே புதிய கட்டடம் செல்லும் வழியில் புதிய சாலை அமைக்கவும், குறைகளை நிவர்த்தி செய்யவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.ஊராட்சி தலைவர் கல்பனா கூறுகையில், இது குறித்து யூனியன் நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்துள்ளேன் என்றார்.
22-Oct-2024