உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரேஷன்  பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து  போராட்டம்

ரேஷன்  பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து  போராட்டம்

ராமநாதபுரம் ; தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில்ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு சட்டை அணிந்துஒரு நாள் வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.ராமநாதபுரம் மாவட்ட தலைவர் தினகரன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் மாரிமுத்து, மாவட்டச் செயலாளர் ஞானசேகரன் முன்னிலை வகித்தனர். பொது விநியோகத்திற்கு என தனித்துறை, விரல் ரேகை பதிவு, இணைய தள சேவை மேம்படுத்தல், டி.என்.சி.எஸ்.சி., குடோனில்எடை தராசும், அவ்வலுக கம்ப்யூட்டர் உடன் இணைத்து ரசீது வழங்க வேண்டும். அதன் பிறகு ரேஷன் கடையில் எடை தராசு, பி.ஓ.எஸ்., கருவியை இணைக்க வேண்டும். உணவுப்பொருட்கள் அனைத்தையும் பொட்டலமாக வழங்க வேண்டும். ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மாவட்டப் பொருளாளர் செல்வம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !