ராமேஸ்வரம் அமிர்தா பள்ளியில் மண்டல அளவில் கோகோ போட்டி
ராமேஸ்வரம்: சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான மண்டல அளவிலான கோகோ போட்டி ராமேஸ்வரம் அமிர்தா வித்யாலயா பள்ளியில் நடந்தது. இதில் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்ட சேர்ந்த 21 பள்ளியில் இருந்து 850 மாணவர்கள் பங்கேற்றனர். அமிர்தா வித்யாலயா பள்ளி மேலாளர் பிரம்மச்சாரிணி லட்சுமியம்மா தலைமை வைத்தார். இதில் 12 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் ராமநாதபுரம் எம்.ஜி., பப்ளிக் பள்ளி, மாணவிகள் பிரிவில் சிவகங்கை மான்போர்ட் பள்ளியும், 14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் ராமேஸ்வரம் அமிர்தா வித்யாலயா பள்ளியும், மாணவிகள் பிரிவில் ராமநாதபுரம் செய்யது அம்மாள் பள்ளியும், 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் ராமேஸ்வரம் அமிர்தா வித்யாலயா பள்ளியும், 19 வயதுக்குட்பட்ட மாணவர்கள் இரு பிரிவிலும் ராமநாதபுரம் ஷிபான் குளோபல் அகடாமி பள்ளி முதலிடம் பிடித்து வெற்றி பெற்றது. இந்த போட்டியை ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார், கால்நடை வளர்ப்புதுறை கண்காணிப்பாளர் காயத்ரி, நாகாச்சி விவேகானந்தா வித்யாலயா பள்ளி முதல்வர் மரியகிருபா ஆகியோர் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினர்.