உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கொலை வழக்கில் ஜாமினில் வந்த இருவர் மீண்டும் கைது கண்டித்து உறவினர்கள் மறியல்

கொலை வழக்கில் ஜாமினில் வந்த இருவர் மீண்டும் கைது கண்டித்து உறவினர்கள் மறியல்

ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வந்த இருவரை போலீசார் மீண்டும் கைது செய்ததைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியல் செய்து தீக்குளிக்க முயன்றனர். ஜன.,14ல் ராமேஸ்வரம் சேராங்கோட்டை தெற்கு கரையூரை சேர்ந்த இரு தரப்பினரிடையே நடந்த மோதலில் நம்புகுமார் என்பவர் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தெற்கு கரையூரை சேர்ந்த 11 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்த சொக்கேஸ்வரன், அயன்சரண், அஸ்வின், நம்புசரண் ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். மற்ற 7 பேரும் நேற்று முன்தினம் ஜாமினில் வந்து பரமக்குடி நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வந்தனர்.அவர்களில் நேற்று மதியம் வீட்டில் இருந்த கருணாகரன் 20, சதீஷ்குமாரை 21, போலீசார் மீண்டும் கைது செய்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். இதனை கண்டித்து உறவினர்கள் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர். அப்போது திடீரென சத்யா, விஜயலட்சுமி ஆகியோர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனை போலீசார் தடுத்து இருவர் மீதும் தண்ணீர் ஊற்றினர். பின் கைது செய்த இருவரையும் ஒப்படைப்பதாக ராமேஸ்வரம் டி.எஸ்.பி., சாந்தமூர்த்தி உறுதி அளித்தார். இதனால் மறியலை வாபஸ் பெற்றனர். இப்பிரச்னையால் 45 நிமிடம் போக்குவரத்து ஸ்தம்பித்து சுற்றுலாப் பயணிகள் அவதிப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ