பாம்பன் கடலில் உள்ள பாலத்தில் சேதமடைந்த ரோடு புதுப்பிப்பு
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் சேதமடைந்த தார் ரோட்டை புதுப்பிக்கும் பணி நடக்கிறது.பாம்பன் கடலில் 1988ல் அமைத்த தேசிய நெடுஞ்சாலை பாலம் ராமேஸ்வரம் தீவை இணைக்கிறது. இப்பாலம் வழியாக தினமும் ஏராளமான வாகனங்களில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் தீவில் வசிக்கும் மக்கள் அரசு பஸ்சில் வந்து செல்கின்றனர். இப்பாலத்தில் சாலை குண்டும் குழியுமாக சேதமடைந்தும், மின்விளக்குகள் எரியாமல் இருளில் மூழ்கியும், தடுப்புச் சுவர்கள், நடுவில் உள்ள இரும்பு பிளேட்டுகள் சேதமடைந்து இருந்தது. தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் சேதமடைந்த தார் ரோட்டை நேற்று புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டனர். இப்பணி இரு நாட்கள் நடக்கும் என தெரிவித்தனர்.