உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காப்பீடு தொகை வழங்க கோரிக்கை  

காப்பீடு தொகை வழங்க கோரிக்கை  

ராமநாதபுரம் : கடலாடி தாலுகா தனிச்சியம் குரூப்பில் நெற்பயிர் காப்பீட்டுக்குரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.தனிச்சியம் குரூப்பை சேர்ந்த விவசாயிகள் பலர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனர். இதில் சேரந்தை, குசவன்குளம், சேனாங்குறிச்சி, கொத்தங்குளம் கிராமங்களில் பருவம் தவறிய மழையால் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. புள்ளியியல், வருவாய் துறை, விவசாய துறையினர் கணக்கெடுப்பு நடத்தினர். இதில் குறைந்த அளவே கணக்கு காட்டியுள்ளனர். அதே சமயம் அருகில் உள்ள கீழக்கிடாரம், வாலிநோக்கம், சிறைக்குளம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை வழங்கியுள்ளனர்.தனிச்சியம் குரூப்பிற்கு இதுவரை வழங்க வில்லை. உடனடியாக பாதிக்கப்பட்ட தனிச்சியம் குரூப் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை