மேலும் செய்திகள்
உறுப்பினர் சேர்க்கை முகாம்
27-Nov-2024
கமுதி: கமுதியில் தாலுகா மறவர் இன அறக்கட்டளை சங்க கூட்டம் நடந்தது. தலைவர் தர்மலிங்கம் தலைமை வகித்தார். செயலாளர் கணேசன் வரவேற்றார். தமிழகம் முழுவதும் சீர் மரபினர் நலத்துறை சார்பில் நல வாரியம் உறுப்பினர் சேர்க்கை நடக்கிறது. உறுப்பினராக சேர்பவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மட்டும் செல்லுபடியாகும் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. பிறகு அதனை புதுப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நடைமுறையை மாற்றி தமிழகம் முழுவதும் சீர் மரபினர் சமூகத்தை சேர்ந்த அனைவருக்கும் நிரந்தரமான நலவாரிய அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். மத்திய, மாநில அரசின் திட்டங்கள், சலுகைகள், உதவித்தொகைகள், விவசாயம், சுயதொழில், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட மகளிர் சுய உதவி குழுகளுக்கு உரிய முறையில் வங்கி கடன்கள் வழங்க வேண்டும். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிராமங்களில் சிறப்பு கூட்டம் நடத்த வேண்டும். ஜாதி சான்றிதழ் தற்போது இரட்டை முறையில் டி.என்.சி., டி.என்.டி., என வழங்கப்பட்டு வருகிறது. அதனை மாற்றி ஒற்றை ஜாதிச் சான்றிதழ் டி.என்.டி., என்று வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பொருளாளர் செல்லப்பாண்டியன் நன்றி கூறினார்.
27-Nov-2024