சர்வீஸ் ரோட்டை புதுப்பிக்க கோரிக்கை
பரமக்குடி: பரமக்குடியில் வைகை ஆறு சர்வீஸ் ரோட்டை புதுப்பிக்க வேண்டும் என வியாபாரிகள் சங்கம் சார்பில் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். பரமக்குடி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தலைவர் போஸ் தலைமையில் அமைச்சர் மதன் ராஜாவை சந்தித்தனர். அப்போது பரமக்குடியில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட சர்வீஸ் ரோடு சேதமடைந்துள்ளதால் புதுப்பிக்க வேண்டும். ஐந்து முனை ரோடு, பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் செல்லும் ஆர்ச் உள்ளிட்ட இடங்களில் தானியங்கி சிக்னல் விளக்குகளை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பொதுச் செயலாளர் மணிவண்ணன், துணைத் தலைவர்கள் ஜீவானந்தம், சுப்பையா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் இருந்தனர்.