உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆரம்ப சுகாதார நிலையத்தை பராமரிக்க கோரிக்கை

ஆரம்ப சுகாதார நிலையத்தை பராமரிக்க கோரிக்கை

திருப்புல்லாணி; திருப்புல்லாணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பராமரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இங்கு திருப்புல்லாணி சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். வளரிளம் பெண்கள் மற்றும் கர்ப்பிணிகள் ஊட்டச்சத்து மாத்திரை பெறுவதற்காகவும் வருகின்றனர். மருத்துவமனை முன்புறம் உள்ள ரோடு குண்டும் குழியுமாக உள்ளதால் முதியவர்கள்,சிறுவர்கள் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே வளாகபகுதியில் புதிய பேவர் பிளாக் ரோடு அமைக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையம் பின்புறம் அடர்ந்து வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்றி துாய்மையாக பராமரிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி