எஸ்.பி.பட்டினத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் திறக்க கோரிக்கை
தொண்டி: தொண்டி அருகே எஸ்.பி.பட்டினத்தில் பத்திரப் பதிவு அலுவலகம் திறக்க மக்கள் வலியுறுத்தினர்.தொண்டி அருகே எஸ்.பி.பட்டினம் வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. இப்பகுதியில் பிளாட் விற்பனை அதிகளவில் நடக்கிறது. தீர்த்தாண்டதானம், சோழகன் பேட்டை, ஓரியூர், மருங்கூர், வெள்ளையபுரம், கட்டிவயல் போன்ற பகுதி மக்கள் பத்திரம் பதிவு செய்ய 20 கி.மீ.,ல் உள்ள தொண்டிக்கு செல்கின்றனர். இது குறித்து எஸ்.பி.பட்டினம் பஷீர் கூறியதாவது:தொண்டி பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு சென்று பத்திரம் பதிவு செய்துவிட்டு திரும்பி ஊருக்கு செல்ல ஒரு நாள் ஆகி விடுகிறது. நிலத்தை வாங்குபவர்களும், விற்பவர்களும், சொத்து அடமானம் பெறுபவரும், அடமானம் தருபவரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.எனவே எஸ்.பி.பட்டினத்தை மையமாக வைத்து பத்திரப்பதிவு அலுவலகம் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.