பரமக்குடி அரசு கலைக் கல்லுாரி வளாகத்தை சீரமைக்க கோரிக்கை; பொதுப்பணித்துறை நடவடிக்கை தேவை
பரமக்குடி : பரமக்குடி அரசு கலை கல்லுாரி வளாகம் ஆங்காங்கே சேதமடைந்துள்ள நிலையில் குப்பை அடர்ந்துள்ளதால் சீரமைக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பரமக்குடி அரசு கலைக் கல்லுாரி 1995 -96ம் ஆண்டில் நிறுவப்பட்டது. காரைக்குடி அழகப்பா பல்கலையுடன் இணைக்கப்பட்ட கல்லுாரி பி - கிரேடு அங்கீகாரம் பெற்றது.இங்கு இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகள் என உள்ளது. 2500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். தொடர்ந்து இரண்டு ஷிப்டுகளாக கல்லுாரி இயங்கி வருகிறது. இந்நிலையில் கல்லுாரி வளாகம் ஆங்காங்கே சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் ஒவ்வொரு படிக்கட்டுகள் கீழ்ப்பகுதி யிலும் குப்பை தேங்கி உள்ளது. மேலும் கழிப்பறைகள் முறையாக பரா மரிக்கப்படாமல் துர்நாற்றம் வீசி சுகாதாரக் கேடாக உள்ளது. ஆகவே கல்லுாரியை முறையாக பராமரிக்க பொதுப்பணித்துறை மற்றும் கல்லுாரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.