மேலும் செய்திகள்
மீனவர்கள் 11வது நாளாக 'ஸ்டிரைக்'
22-Aug-2025
ராமநாதபுரம்: இலங்கையில் சிறையில் உள்ள 10 தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ராமநாத புரம் பா.ஜ., மாவட்ட தலைவர் முரளிதரன்கோரிக்கை மனு அளித்தார். சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் தமிழ்நாடு பா.ஜ., அலுவலர்கள் கூட்டம் நடந்தது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., தலைவர் முரளிதரன், இலங்கையில் சிறையில் உள்ள 10 மீனவர்களை விடுவிக்க வேண்டும் என மனு அளித்தார்.அவர் கூறியதாவது: விசைப்படகு உரிமையாளர்சீனி என்பவரின் படகில் பாம்பன், தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த தொபியாஸ், குருசாமி, பரத்குமார், ரவி, ஜோஸ்பாரதி, பிரவீன், மனோ, பிலிப்பியாஸ், கிளைட்டன், டேனியல் ஆகிய 10 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அங்கு வந்த இலங்கை கடற்படை வீரர்கள் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அனைவரையும் கைது செய்து படகை கைப்பற்றியுள்ளனர். இதனால் அவர்களின் குடும்பத்தினர் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய நிதியமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.
22-Aug-2025