உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் தண்ணீரில் மிதக்கும் கண்மாயை ஒட்டிய குடியிருப்புகள் அச்சத்தில் மக்கள்

பரமக்குடியில் தண்ணீரில் மிதக்கும் கண்மாயை ஒட்டிய குடியிருப்புகள் அச்சத்தில் மக்கள்

பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கண்மாயை ஒட்டிய குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்ததால் அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.பரமக்குடி அருகே கண்மாய் நீர் நிலைகளை ஒட்டிய இடங்களில் பல்வேறு அரசு ஆவணங்களின் அடிப்படையில் பல நுாறு பேர் வீடுகளை கட்டியுள்ளனர். அதன்படி காட்டு பரமக்குடி, வேந்தோணி, எமனேஸ்வரம் கண்மாயை ஒட்டிய மற்றும் கண்மாய் நீர் பிடிப்புகளில் ஏராளமான வீடுகள் உள்ளன.இங்கு டி.டி.சி.பி., (டைரக்டரேட் ஆப் டவுன் அண்டு கன்ட்ரி பிளானிங்) அப்ரூவல் பெற்ற வீட்டடி மனைகள், நகராட்சி மற்றும் ஒன்றிய அலுவலகங்களில் அனுமதி பெற்று வீடுகளை கட்டி மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்புகளை பெற்றுள்ளனர். இந்நிலையில் இங்கு பல நுாறு வீடுகளை கடந்த 5 ஆண்டுகளாக தண்ணீர் சூழ்ந்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.தெளிச்சாத்தநல்லுார் ஊராட்சி அன்பு நகர், ஆண்டாள் நகர் உள்ளிட்ட பகுதி மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பொதுப்பணி துறையினர் கண்மாய்களை முறையாக துார்வாராத நிலையில் அதிகப்படியான நீர் வரத்து ஏற்படும் போது இது போன்ற சிக்கல் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர் .இப்பகுதியில் வசிக்கும் சரவணன், கல்லுாரி மாணவி அபூர்வா கூறுகையில், அரசு ஆவணங்களின் அடிப்படையில் இடம் விற்கப்படும் நிலையில் வீடுகளை கட்டி உள்ளோம். பல லட்சங்களை செலவு செய்து கட்டிய வீடு நீரில் மிதக்கிறது.பள்ளி, கல்லுாரிக்கு மற்றும் வேலைக்கு செல்லும் நிலையில் வீட்டிலிருந்து நீரில் நடந்து சென்று உடைகளை மாற்றி செல்லும் நிலை உள்ளது. இடுப்பளவு தண்ணீர் தேங்கி இருப்பதால், சிறு குழந்தைகள் முதியவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை