உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஓய்வு பெற்ற செவிலியர் வீட்டில் குத்திக்கொலை

ஓய்வு பெற்ற செவிலியர் வீட்டில் குத்திக்கொலை

சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் நேற்று அதிகாலை ஓய்வு பெற்ற கிராம மகப்பேறு செவிலியர் வீட்டில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். சாயல்குடி காயாம்பு கோயில் தெருவை சேர்ந்தவர் முனியசாமி. இவர் ஏழு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவரது மனைவி ராஜம்மாள் 77. தேவகோட்டை பகுதியில் கிராம சுகாதார மகப்பேறு செவிலியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சாயல்குடியில் உள்ள மகள் வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு உணவு சாப்பிட்ட பின் 'டிவி' பார்த்துவிட்டு 10:30 மணிக்கு அங்கு முதல் மாடி அறையில் துாங்கி உள்ளார். நேற்று அதிகாலை 2:00 மணிக்கு பால்கனி வழியாக குதித்து மாடி அறை கதவை தள்ளி உள்ளே புகுந்த மர்மநபர்கள் ராஜம்மாளின் இடது காது மற்றும் கழுத்துப் பகுதியில் கத்தியால் குத்திக்கொலை செய்து தப்பிச் சென்றனர். காலை 6:00 மணிக்கு டீ கொடுக்க மகள் உமாராணி சென்றபோது கட்டிலில் தாய் கொலை செய்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் லக்கி உதவியுடன் வீட்டை ஆய்வு செய்தனர். அவர் அணிந்திருந்த நகை திருடுபோகவில்லை. முன்விரோதத்தில் கொலை நடந்ததா அல்லது வேறு காரணம் உள்ளதா என சாயல்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை