மேலும் செய்திகள்
அடந்தனார்கோட்டை ரோடு சேதம்: வாகன ஓட்டிகள் சிரமம்
20-Nov-2024
ஆர்.எஸ்.மங்கலம்: தேசிய நெடுஞ்சாலையில் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் ரோட்டில் இருபுறமும் வளர்ந்து வரும் நாணல் கோரை புற்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் அலுவலகத்தில் இருந்து திருவாடானை செல்லும் ரோட்டில் சவேரியார்பட்டினம் விலக்கு வரை 2 கி.மீ., ரோட்டின் இரு ஓரங்களிலும் நாணல் கோரை புற்கள் வளர்ந்துள்ளன.தற்போது நிலவும் சீதோஷ்ண நிலையால் ரோட்டில் இருபுறமும் நாணல் கோரை புற்கள் பூக்கள் பூத்து எழில் கொஞ்சும் நிலையில் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் ரோட்டின் இருபுறமும் நாணல் கோரை புற்களை ரசித்த வண்ணம் செல்லும் நிலை உள்ளது.இந்த வகை கோரை புற்களின் பூக்கள் மகசூல் அடைந்து பஞ்சுகளாக மாறுகின்றன. இதனால் செடிகளில் இருந்து வெடிக்கும் பஞ்சுகள் காற்றின் திசையில் அடித்து வரப்படுகின்றன. இதனால் அவ்வழியாக செல்லும் டூவீலர் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் கண்களில் பட்டு விபத்துக்கள் ஏற்படும் நிலை உள்ளது.எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ரோட்டின் இருபுறமும் உள்ள நாணல் கோரை புற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.
20-Nov-2024