தொண்டி கடலில் பாதுகாப்பு ஒத்திகை
தொண்டி: தொண்டி முதல் தேவிபட்டினம் வரை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். கடல் வழியாக மர்ம நபர்கள் ஊடுருவலை தடுக்கும் பொருட்டு கடலோர காவல்படை சார்பில், பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி தேவிபட்டினம் மற்றும் தொண்டி மரைன் போலீசார் கூட்டுரோந்து பணியில் நேற்று முன்தினம் ஈடுபட்டனர். எஸ்.பி.பட்டினம், பாசிபட்டினம், தொண்டி, நம்புதாளை, முள்ளிமுனை, காரங்காடு, தேவிபட்டினம், திருப்பாலைக்குடி போன்ற கடலோரங்களில் ஆய்வு செய்தனர். படகில் கடலுக்குள் சென்று மீனவர்களின் படகுகளை சோதனையிட்டனர். அந்நியர்கள், தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்து கண்காணித்தனர். மீனவர்களிடம் சந்தேகபடும் நபர்கள் குறித்து தகவல் தெரிந்தால் உடனே தெரிவிக்க வேண்டும் என்று மீனவர்களிடம் தெரிவித்தனர்.