உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கிராமங்களில் சிமென்ட் அடுப்புகள் விற்பனை

கிராமங்களில் சிமென்ட் அடுப்புகள் விற்பனை

திருப்புல்லாணி:திருப்புல்லாணி சுற்றுவட்டார கிராமங்களில் புதிய வரவாக சிமென்ட் அடுப்புகளை விற்கின்றனர்.திருப்புல்லாணி அருகே சின்னாண்டி வலசை பகுதியில் சிமென்ட், கம்பி, மண் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி அடுப்பு வடிவமைத்துள்ளனர். ஒரு அடுப்பின் விலை ரூ.250 ஆகும். 5 கிலோ எடை கொண்டது. கோயில்களில் பொங்கல் வைப்பதற்கு வீட்டில் இருந்து எடுத்துச் செல்வதற்கு ஏற்ற வகையில் இந்த அடுப்பு உள்ளது. சேதமடையாத கடினமாக உழைக்கும் அளவிற்கு சிமென்ட் அடுப்புகள் உள்ளதால் பெண்கள் வாங்கிச் செல்கின்றனர் என வியாபாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ