துாய்மை பணியாளர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
முதுகுளத்துார்; முதுகுளத்துார் பேரூராட்சி அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துாய்மைப் பணியாளர்கள், விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முதுகுளத்துார் பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து துாய்மைப் பணியாளர்கள் வருகை பதிவேடு தினசரி காலை 6:30 மணிக்கு எடுக்க வேண்டும். ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் அனை வருக்கும் தினசரி வருகை பதிவேட்டில் கையொப்பம் பெற ஒப்பந்ததாரர் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். துாய்மைப் பணி யாளர்கள் அனைவருக்கும் பிரதி மாதம் 1ம் தேதி ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் மாதம் அமைதிக் குழு கூட்டம் நடந்தது. இந்நிலையில் கோரிக்கையை நிறைவேற்றாததை கண்டித்து முது குளத்துார் பேரூராட்சி அலுவலகம் முன் விடுதலை சிறுத்தை கட்சி துாய்மை பணியாளர் மேம்பாட்டு இயக்கம் மாவட்ட செயலாளர் பூமிநாதன் தலைமையில் துாய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.