மேலும் செய்திகள்
சாத்தையனார் கோயில் எருதுகட்டு விழா
08-May-2025
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே தாதனேந்தல் ஊராட்சி பொக்கனாரேந்தல் கிராமத்தில் பழமை வாய்ந்த மலைமேல் சாத்தார் உடையார் அய்யனார் கோயில் உள்ளது. இங்கு 59ம் ஆண்டு சமத்துவ எருதுகட்டு விழா நேற்று காலை 10:00 மணிக்கு துவங்கியது. நுாறு அடி நீளம் கொண்ட வடக்கயிற்றின் ஒரு புறத்தில் காளையின் கழுத்தில் கட்டப்பட்டும் மறுபுறத்தை 50க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் எடுத்துச் சென்றனர். மைதானத்தை ஒரு முறை வலம் வந்து பின்னர் மாடு பிடிக்கும் வீரர்கள் காளையை பிடித்தனர். பிடிபடாத காளைகளுக்கு பரிசுகளும், பிடித்த வீரர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.ராமநாதபுரம் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 40 வடமாடு எருதுகட்டு காளைகள் போட்டியில் பங்கேற்றன. ஏற்பாடுகளை எருது கட்டு விழாக் குழுவினர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
08-May-2025