உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / புதுமைப்பெண்  திட்டத்தில் திருநங்கைக்கு உதவித்தொகை  

புதுமைப்பெண்  திட்டத்தில் திருநங்கைக்கு உதவித்தொகை  

ராமநாதபுரம் : உயர்கல்வி பயிலும் திருநங்கைகள் நல வாரியத்தால் வழங்கப்பட்டஅடையாள அட்டையை சான்றாக சமர்ப்பித்து புதுமைப்பெண்திட்டத்தில் உதவித்தொகை பெறலாம்.உயர்கல்வி பயிலும் திருநங்கைகள் அனைவருக்கும் கல்விக்கட்டணம்,விடுதிக்கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் அரசே ஏற்கும்என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன்படி திருநங்கைகளின்உயர்கல்வியை உறுதிப்படுத்தும் விதமாக மூவலுார் ராமாமிர்தம்அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் (புதுமைப்பெண்) மற்றும்தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் திருநங்கை, திருநம்பி மற்றும் இடைபாலினர்உள்ளிட்ட அனைத்து திருநங்கைகளும் பயன்பெறும் வகையில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும் என்பது முழுவதுமாக தளர்வு செய்யப்பட்டுள்ளது. அதாவது தமிழ்நாடுதிருநங்கைகள் நல வாரியத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையைசான்றாக சமர்ப்பித்து இத்திட்டத்தில் பயன்பெறலாம் என கலெக்டர்சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை