உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பனை விதைகள் நட்ட பள்ளி மாணவர்கள்

பனை விதைகள் நட்ட பள்ளி மாணவர்கள்

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே இளஞ்செம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தேசிய பசுமைப் படை மாணவர்கள் சார்பில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். இளஞ்செம்பூர் கண்மாய் கரையில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடைவெளி விட்டு 250க்கும் மேற்பட்ட பனை விதைகளை நட்டனர்.பருவமழை காலத்தை கருத்தில் கொண்டு தேசிய பசுமைப் படை மாணவர்கள் பல்வேறு பகுதியில் இருந்து பனை விதைகள் ஏற்பாடு செய்து கண்மாய் கரை முழுவதும் நட்டனர். மாணவர்களை ஆசிரியர்கள், கிராம மக்கள் பாராட்டினர்.இதே போன்று இளஞ்செம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களை முன்னுதாரணமாக கொண்டு பல்வேறு கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் தங்கள் பகுதியிலும் பனை விதைகள் நடுவதற்கு முயற்சிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ