உள்ளூர் செய்திகள்

விநாடி வினா போட்டி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் எம்.ஜி.பப்ளிக் சி.பி.எஸ்.சி., பள்ளியில் 2026 ம் ஆண்டுக்கான விநாடி வினா போட்டி நடந்தது. நிறுவனர்கள் சுப்ரமணியம், பிரேமலெட்சுமி தலைமை வகித்தனர். தாளாளர் ஹர்ஷவர்தன் துவக்கி வைத்தார். முதல்வர் விஜயலெட்சுமி, துணை முதல்வர் ராதா வரவேற்றனர். போட்டியில் 11 பள்ளிகள் பங்கேற்றன. இதில் நேஷனல் அகாடமி சி.பி.எஸ்.சி., பள்ளி முதலிடம் பெற்று சுழல் கேடயம் வென்றது. இரண்டாவது பரிசை கிருஷ்ணா இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.சி., பள்ளி வென்றது. பங்கேற்ற அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் சான்றிதழ்களை பள்ளி நிறுவனர்கள் வழங்கினர். –––


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !