உள்ளூர் செய்திகள்

 கருத்தரங்கு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதுகலை ஆங்கிலத்துறை சார்பில் நவீன காலத்தில் ஷேக்ஸ்பியரின் பொருத்தம் என்ற தலைப்பில் மாநில கருத்தரங்கம் நடந்தது. முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்து, நவீன காலத்தில் ஷேக்ஸ்பியரின் பொருத்தம் புத்தகத்தை வெளியிட்டு பேசினார். உதவிப்பேராசிரியர் ஸ்டாலின் வரவேற்றார். புத்தகத்தை பெற்றுக்கொண்ட சிறப்பு அழைப்பாளர் வின்சென்ட் ராஜசேகர் ஷேக்ஸ்பியர் குறித்து பேசினார். மாணவர்கள் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தனர். ஏற்பாடுகளை ஆங்கிலத் துறைத்தலைவர் சத்தியவதி, உதவிப் பேராசிரியர்கள் செய்தனர். உதவிப்பேராசிரியர் சரவணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை