உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கழிவுநீர் கால்வாயில் அடைப்பால் வீடுகளை சுற்றி தேங்கும் கழிவுநீர்

கழிவுநீர் கால்வாயில் அடைப்பால் வீடுகளை சுற்றி தேங்கும் கழிவுநீர்

முதுகுளத்துார்; முதுகுளத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதால் வீடுகளை சுற்றி கழிவுநீர் குளம்போல் தேங்குகிறது. முதுகுளத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகளில் பயன்படுத்தப்படும் கழிவுநீர் செல்வதற்காக கால்வாய் உள்ளது. முதுகுளத்துார் கமுதி ரோடு பேரூராட்சி அலுவலகம் அருகே கால்வாயில் கழிவுநீர் செல்லாமல் தேங்கியுள்ளது. வீடுகளில் பயன்படுத்தப்படும் கழிவுநீர் செல்ல வழியின்றி கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பால் வீடுகளை சுற்றி குளம்போல் தேங்குகிறது. இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இரவு நேரத்தில் கொசுத் தொல்லையால் அவதிப்படுகின்றனர். இதேபோன்று பல்வேறு வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்துள்ளது. மேலும் ரோட்டோரத்தில் உள்ள கால்வாயில் ரோடுகளில் கழிவுநீர் தேங்கியுள்ளது. எனவே பேரூராட்சி அதிகாரிகள் கால்வாயில் அடைப்புகளை சரி செய்து கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை