பஸ் ஸ்டாண்டில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் பழைய பஸ்ஸ்டாண்டில் போதிய கழிப்பறை வசதியின்றி மறைவான இடங்களில் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றத்தால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.ராமநாதபுரம் புது பஸ்ஸ்டாண்டில் விரிவாக்கப் பணி நடைபெறுவதால் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள பழைய பஸ்ஸ்டாண்டில் இருந்து 300க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இட நெருக்கடியால் கடைகளும் பெயரளவில் மட்டுமே உள்ளன.கழிப்பறை வசதி போதுமான அளவில் இல்லை. இதனால் சிலர் திறந்தவெளியை சிறுநீர் கழிப்பிடமாக பயன்படுத்துவதால் கழிவுநீர் தேங்கி அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. கழிப்பறையும் பெயரளவில் சுத்தம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.எனவே திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பவர்கள் மீது நடவடிக்கைஎடுக்க வேண்டும்.கழிப்பறையை சுத்தம் செய்வதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.