தையல் இயந்திரம் வழங்கல்
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் சோசியோ எக்னாமிக் ரீபார்ம் ஆர்க்கனேஷன் தொண்டு நிறுவனம் சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்ப பெண்களுக்கு உதவுகின்றனர். கடந்த மாதம் தோசை மாவு விற்பனை தொழில் புரிவோருக்கு கிரைண்டர்கள் வழங்கப்பட்டது. நடப்பு மாதம் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் செரோ அறக்கட்டளை நிர்வாகி குகன், நகராட்சி கவுன்சிலர் குமார், செர்டி அறக்கட்டளை தலைவர் கணேசன் பங்கேற்றனர். ––