உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குறுவட்ட தடகள போட்டிகள்

குறுவட்ட தடகள போட்டிகள்

பரமக்குடி: பரமக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 2025--26ம் கல்வி ஆண்டிற்கான நயினார்கோவில் குறுவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன் தேசிய கொடி ஏற்றி போட்டிகளை துவக்கி வைத்தார். மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பாரதிராஜன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் சர வணன் வரவேற்றார். 14, 17, 19 வயது பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்களுக்கான 100மீ., 200மீ., 400மீ., ஓட்டம், நீளம், உயரம் தாண்டுதல், குண்டு, வட்டு எறிதல், அஞ்சல் ஓட்டம் போட்டிகள் நடந்தது. ரோட்டரி சங்க தலைவர் சரவணகுமார், செயலாளர் அன்வர்ராஜா, பொரு ளாளர் நவின்குமார் வாழ்த்தினர். நயினார்கோவில் குறு வட்ட தலைவர் நாகசாமி, செயலாளர் அசோக், பொருளாளர் மகேஷ்ராணி ஏற்பாடுகளை செய்தனர். முதல் 3 இடம் பெற்ற வர்களுக்கு சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது. ஆசிரியர் ராஜ்குமார் நன்றி கூறினார். இன்று மாணவிகளுக்கான போட்டிகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை