மேலும் செய்திகள்
முட்டையிடும் ஆமைகள் :மயிலாடுதுறையில் அதிர்ச்சி
28-Feb-2025
திருவாடானை: தொண்டி அருகே பி.வி. பட்டினம் கடற்கரையில் இறந்த ஆமை கரை ஒதுங்கியது.ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதியில் அலுங்காமை, சித்தாமை, பச்சை ஆமை, தோணி ஆமைகள் வசிக்கின்றன. இந்த ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக கடற்கரையை நோக்கி வருவது வழக்கமாக உள்ளது. இந்த வகையான ஆமைகள் மீனவர்களின் வலையில் சிக்கும் போது மீனவர்கள் ஆமையை பிடித்து உயிருடன் கடலில் விடுகின்றனர்.நேற்று தொண்டி அருகே பி.வி.பட்டினம் கடற்கரையில் 3 அடி நீளம், 2 அடி அகலம் கொண்ட 60 கிலோ ஆமை உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியது. இது இனப்பெருக்கத்திற்காக கரை நோக்கி வந்த போது படகு அல்லது பாறையில் மோதி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.இறந்த ஆமை சித்தாமை வகையை சேர்ந்தது. இந்த ஆமையை தொண்டி கால்நடை டாக்டரின் பரிசோதனைக்கு பிறகு வனத்துறையினர் கடற்கரையில் புதைத்தனர்.
28-Feb-2025