உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வண்ணாங்குண்டு பெரிய ஊருணியில் ஆபத்தான நிலையில் பக்கவாட்டு தடுப்பு

வண்ணாங்குண்டு பெரிய ஊருணியில் ஆபத்தான நிலையில் பக்கவாட்டு தடுப்பு

வண்ணாங்குண்டு: அக். 30---: வண்ணாங்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள பெரிய ஊருணி சமீபத்தில் பெய்த மழையால் நிரம்பியுள்ளது. இந்நிலையில் பெரிய ஊருணியின் தெற்கு பகுதியில் உள்ள பக்கவாட்டு மண்ணாலான தடுப்பு சேதமடைந்துள்ளது. பொதுமக்கள் கூறிய தாவது: சமீபத்தில் பெய்த மழையால் வண்ணாங்குண்டு பெரிய ஊருணி முழு கொள்ளளவையும் எட்டியுள்ளது. இந்நிலையில் தெற்கு பகுதியில் உள்ள வரப்பு பகுதி 1 மீ., அகலத்திற்கு இடைவெளி மட்டும் உள்ளது. வரக்கூடிய காலங்களில் மழை பெய்தால் மண்ணரிப்பு ஏற்பட்டு ஊருணியில் பெரும்பகுதி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் ஊருணி உடைப்பில் இருந்து பாதுகாக்க உரிய தடுப்புச் சுவர் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை இருக்க வேண்டும். இவ்விஷயத்தில் ஊராட்சி மற்றும் வருவாய்த் துறையினர் இணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !