உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சூரியவீடு மின்சார திட்டம்நாளை விழிப்புணர்வு முகாம்

சூரியவீடு மின்சார திட்டம்நாளை விழிப்புணர்வு முகாம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கோட்ட மின்பகிர்மான சார்பில், வீடுகளின் கூரைகளில் புதிய சூரிய ஒளி மின்தகடுகள் அமைப்பதற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் விழிப்புணர்வு முகாம், நாளை (அக்.16) வெள்ளிக்கிழமை அன்று காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை பாரதிநகர் அருகில் உள்ள வசந்தம் மகாலில் நடைபெற உள்ளது. இம்முகாமில் திட்டம் குறித்த தகவல்கள், விண்ணப்ப பதிவு, வங்கிக்கடன் பெறுவதற்கான வழிகாட்டுதல் உள்ளிட்ட சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்படும். மத்திய, மாநில அரசுகளின் மானியம் ரூ.1 லட்சம் வரையில் இத்திட்டத்தின் மூலம் பெறலாம். எனவே தங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடுகள் நிறுவ விரும்பும் பொதுமக்கள் இம்முகாமில் பங்கேற்று திட்டம் குறித்த விவரங்களை அறிந்து பயன்பெறலாம் என ராமநாதபுரம் செயற்பொறியாளர் விஜயா தெரிவித்துள்ளார். –––


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை