உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பள்ளிகளில் குழந்தைகளை விட வரும்  பெற்றோர் ெஹல்மெட் அணிய வேண்டும் எஸ்.பி., சந்தீஷ் எச்சரிக்கை

பள்ளிகளில் குழந்தைகளை விட வரும்  பெற்றோர் ெஹல்மெட் அணிய வேண்டும் எஸ்.பி., சந்தீஷ் எச்சரிக்கை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளில் குழந்தைகளை விடுவதற்காக டூவீலர்களில் வரும் பெற்றோர் ஹெல்மெட் அணியாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என சந்தீஷ் எஸ்.பி., எச்சரித்துள்ளார்.அவரது செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:மாவட்டத்தில் பள்ளி பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட போது குழந்தைகளை விட வாகனங்களில் வரும் பெற்றோரில் சிலர் மட்டுமே ஹெல்மெட் அணிந்து வருகின்றனர். ெஹல்மெட் அணியாமல் பள்ளி குழந்தைகளை அழைத்து வருவதால் அதை பார்க்கும் குழந்தைகளும் 18 வயதை கடக்கும் போது ெஹல்மெட் அணியாமல் மோட்டார் வாகன விதிகளை கடைப்பிடிக்காமல் இருக்க வாய்ப்பு உள்ளது.எனவே பெற்றோர் குழந்தைகளை வாகனங்களில் அழைத்து வரும் போது புத்தகப்பை, உணவுப் பைகளை வாகனத்தின் முன்பு வைத்து ஓட்டி வரும் போது விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் இரு சக்கரவாகனங்களில் வரும் பெற்றோர் ெஹல்மெட் அணிந்து வர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.குழந்தைகளை அழைத்து வரும் போது ஹெல்மெட் அணிவது அவசியமாகும். ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளின் அருகில் வாகன தணிக்கை செய்து இருசக்கர வாகனங்களில் ெஹல்மெட் அணியாமல் வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சந்தீஷ் எஸ்.பி., தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ