பிரதம மந்திரி கவுரவ நிதி பெறும்விவசாயிகளுக்கான சிறப்பு முகாம்
ராமநாதபுரம்: பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் பயன் பெற தகுதியுடைய விவசாயிகள் 20வது தவணை தொகை ரூ.2000 பெறுவதற்கான விண்ணப்பங்களை சரி செய்வதற்காக மே 31 வரை சிறப்பு முகாம் நடக்கிறது.திருப்புல்லாணி வட்டார வேளாண் உதவி இயக்குநர் செல்வம் கூறியிருப்பதாவது: பிரதமரின் கவுரவ நிதி திட்டத்தில் தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் எவ்வித விடுதலும் இன்றி பயன்பெறும் பொருட்டு சிறப்பு முகாம்கள் திருப்புல்லாணி, மண்டபம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் பொது சேவை மையங்களில் மே 31ல் நடக்கிறது. இம்முகாமில் நில உடமை பதிவேற்றம், இ.கே.ஒய்.சி பதிவேற்றம் செய்யாத விவசாயிகள் பயன்பெறலாம். மேலும் வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்காத விவசாயிகள் சம்பந்தப்பட்ட வங்கியை அல்லது அஞ்சல் அலுவலகங்களில் புதிதாக வங்கி கணக்கு துவங்கி பயன் பெறலாம். நில உடமை பதிவேற்றம் செய்துள்ள விவசாயிகளுக்கு மட்டுமே 20வது தவணை தொகை விடுவிக்கப்பட உள்ளது. எனவே 2019 பிப்.,1ல் நிலப் பட்டா வைத்திருக்கும் தகுதியுடைய இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் ஆதார் எண், நில உடமை ஆவணங்கள்,வங்கி கணக்கு விவரம் ஆகியவற்றை பயன்படுத்தி பி.எம்.கிசான் இணையதளத்தில் தாங்களாகவோ அல்லது பொது சேவை மையத்தை அணுகி பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.