உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மேதலோடையில் சிறப்பு கிராம சபை கூட்டம்

மேதலோடையில் சிறப்பு கிராம சபை கூட்டம்

திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே மேதலோடை ஊராட்சியில் நேற்று காலை 11:00 மணிக்கு தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. கலெக்டர் சிம்ரன் ஜித் சிங் காலோன் தலைமை வகித்து பேசியதாவது:கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய மருந்து மாத்திரைகள் மற்றும் ஊட்டச்சத்து பொருள்களை அலுவலர்கள் தெரிவிக்கும் போது சாப்பிட்டு வர வேண்டும். ஜல் ஜீவன் திட்டமானது கிராமங்கள் தோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதன் நோக்கம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குவதாகும். இத்திட்டத்தில் பயன் பெறாதவர்கள் யூனியன் அலுவலகத்தை அணுகி உங்களுடைய விபரத்தை தெரிவித்து இணைப்பைப் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.வருவாய்த் துறையின் மூலம் 5 பேருக்கு பட்டா மாறுதல் பெறுவதற்கான ஆணையும், 3 பேருக்கு புதிய ரேஷன் கார்டு மற்றும் வேளாண்மை துறை சார்பில் 2 பேருக்கு ரூ. 2400 மதிப்புள்ள பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரதாப் சிங், ஊராட்சிகள் உதவி இயக்குனர் பத்மநாதன், பி.டி.ஓ., ராஜேஸ்வரி, கோட்டை இளங்கோவன், கீழக்கரை தாசில்தார் ஜமால் முகமது, முன்னாள் ஊராட்சி தலைவர் மெனையத்தாள், தினகர்ராஜ், ஊராட்சி செயலர் பேச்சியம்மாள் கலந்து கொண்டனர்.

திருவாடானை

திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் தொழிலாளர் தினமான நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சிகளில் நடந்துள்ள வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.திருவாடானை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) ஆரோக்கிய மேரிசாராள் ஆய்வு செய்தார். ஏற்பாடுகளை ஊராட்சி செயலர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி