உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாற்றுத்திறனாளியை தாக்கிய தனிபிரிவு போலீஸ் சஸ்பெண்ட்

மாற்றுத்திறனாளியை தாக்கிய தனிபிரிவு போலீஸ் சஸ்பெண்ட்

ராமநாதபுரம்; ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே மாற்றுத்திறனாளியை தாக்கிய வழக்கில் தனிப்பிரிவு போலீஸ் லிங்கசாமி தற்காலிக பணிநீக்கம்செய்யப்பட்டுள்ளார்.முதுகுளத்துார் அருகே சித்திரங்குடியை சேர்ந்த மாற்றுத்திறனாளி தங்கவேலு 40. அப்பகுதியில் கண்மாய் கரையில் பெட்டிக்கடை வைத்துள்ளார். ஜூன் 14ல் பேரையூர் தனிப்பிரிவு போலீஸ் லிங்குசாமி 36(முதல்நிலை காவலர்) அக்கடையில் சில்லரை விலையில் மது விற்பனை புகார் குறித்து சோதனை செய்ய வந்தார்.இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் ஒருவரை ஒருவர் கம்பியால் தாக்கிக்கொண்டனர். இதில் லிங்குசாமிக்கு தலையில் காயம் ஏற்பட்டு பரமக்குடி அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தங்கவேலுக்கு கைமுறிவு ஏற்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.இப்பிரச்னை தொடர்பாக தங்கவேலு, லிங்கசாமி இருவரது புகாரில் பேரையூர் போலீசார் வழக்கு பதிந்தனர். ஜூன் 25ல் லிங்குசாமியை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி.,சந்தீஷ் உத்தரவிட்டார்.சில ஊடகங்களில் மாற்றுத்திறனாளி கையை முறித்த போலீஸ் என நேற்று செய்தி ஒளிப்பரப்பானது. தங்கவேலு, லிங்குசாமி தகராறில் இருதரப்பு புகாரில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என எஸ்.பி, சந்தீஷ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !