பேச்சுப் போட்டி, தொல்காப்பிய திறனறி தேர்வு
பரமக்குடி : பரமக்குடியில் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி மற்றும் கல்லுாரியில் பயிலும் தமிழ் இலக்கிய மாணவர்களுக்கான தொல்காப்பிய திறனறித் தேர்வு நடந்தது.தமிழ்நாடு முதுகலை தமிழாசிரியர் அவையம் சார்பில், நடந்த போட்டியில் பங்கேற்றவர்களை அவைய நிறுவனர் சண்முகநாதன் வரவேற்றார். பேச்சுப் போட்டியில் ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி மாணவி நேத்ரா முதலிடமும், சித்தார்கோட்டை முகமதியா மேல்நிலைப்பள்ளி மாணவி ஹாசினி இரண்டாமிடம், கமுதி ரஹ்மானியா மெட்ரிக் பள்ளி மாணவி காவிய ஜனனி மூன்றாம் பரிசு பெற்றனர்.இதேபோல் தொல்காப்பிய திறனறித் தேர்வில் மதுரை பாத்திமா கல்லுாரி மாணவி தனலட்சுமி முதல் பரிசு, கடலுார் பெரியார் கலைக் கல்லுாரி மாணவி ராஜி இரண்டாமிடம், மதுரை பாத்திமா கல்லுாரி மாணவி சுரேகா மூன்றாம் பரிசு பெற்றனர்.நடுவர்களாக ஆசிரியர்கள் ஹேமா, சுதந்திர ஜோதி, பூச்சேது பாண்டியன் இருந்தனர். ஏற்பாடுகளை சேது பழனி, மணிமொழி, வெள்ளைத்துரை, கதிர்மணி உள்ளிட்ட ஆசிரியர்கள் செய்தனர்.