உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உப்பூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

உப்பூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் உங் களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில் பட்டா மாறுதல், மகளிர் உரிமைத் தொகை, ரேஷன் கார்டு விண்ணப்பித்தல், முதியோர் உதவித்தொகை, புதிய வீட்டு வரி ரசீது உள்ளிட்ட பல்வேறு மனுக்களை பயனாளிகள் அளித்தனர். பொதுமக்கள் அளித்த மனுக்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட துறை களுக்கு அனுப்பப்பட்டது. முகாமில் ஆர்.எஸ். மங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணன், லிங்கம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சவுந்தரவள்ளி, ஆர்த்தி, முனீஸ் பிரபு, முரு கேசன் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை