உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நபீசா அம்மாள் மெட்ரிக்பள்ளியில் மாநில அளவிலான யோகா போட்டி

நபீசா அம்மாள் மெட்ரிக்பள்ளியில் மாநில அளவிலான யோகா போட்டி

ராமநாதபுரம் : ராமநாதபுரம் பட்டணம்காத்தானில் உள்ள நபீசா அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 85-வது மாநில அளவிலான யோகாசன போட்டிகள் நடந்தது.நபீசா அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாக இயக்குனர் அப்துல் முனாப் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் முகம்மது பவுசுதீன் முன்னிலை வகித்தார். முதல்வர் முகம்மது யூசுப் வரவேற்றார். இன்டர்நேஷனல் யோகா முதன்மை பயிற்றுனர் பத்மநாபன், தமிழ்நாடு யோகா ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் செயலாளர் மாரியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஐந்து நிலையில் உள்ள யோகாசனங்களை செய்து காட்டினர். இதில் நபீசா அம்மாள் மெட்ரிக் பள்ளி மாணவிகள் 8 பேர் சாம்பியன்ஷிப் பரிசுகளும், சான்றிதழும் பெற்றனர். இன்டர்நேஷனல் யோகா பயிற்சியாளர் சரவணன் நன்றி கூறினார். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை