தெருமுனை பிரசாரம்
ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலத்தில் இந்திய கம்யூ., சார்பில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது. நகர் செயலாளர் சூசை தலைமை வகித்தார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் குருசாமி முன்னிலை வகித்தார். மக்களின் கோரிக்கைகளை அரசு மற்றும் அரசு அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும். ஆர்.எஸ். மங்கலம் பேரூராட்சி பகுதியில் கழிவுநீர் கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலோர கிராமத்திற்கு முறையாக குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார். கட்சி நிர்வாகி தங்கராசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.