உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வாரச்சந்தை வளாகத்தில் வசதியின்றி ரோட்டில் வியாபாரிகள் அவதி

வாரச்சந்தை வளாகத்தில் வசதியின்றி ரோட்டில் வியாபாரிகள் அவதி

ராமநாதபுரம்: பட்டணம்காத்தான் ஊராட்சி அம்மா பூங்கா அருகே வாரச்சந்தை நடைபெறும் வளாகம் சிறிய மழைக்கே சேறும் சகதியாகியுள்ளதால் வியாபாரிகள் ரோட்டில் கடை விரித்து அவதிப்பட்டனர். போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது. பட்டணம்காத்தான் டி-பிளாக் ரோடு அம்மா பூங்கா அருகே வாரச்சந்தைக்கு ஒதுக்கிய இடம் தாழ்வாக உள்ளதால் சிறிய மழை பெய்தால் கூட சேறும், சகதியாகிவிடுகிறது நேற்று புதன்கிழமை வாரச்சந்தை டி-பிளாக் ரோட்டில் வியாபாரம் நடந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வேகமாக வாகனங்கள் வரும் போது கவனக்குறைவால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக வியாபாரிகள், பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். ரூ.பலஆயிரம் வாடகை வசூல் செய்யும் பட்டணம்காத்தான் ஊராட்சி நிர்வாகம் சந்தைக்கு ஒதுக்கிய இடத்தில் பள்ளத்தை மண்கொட்டி மேடாக்க வேண்டும். அதற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை