உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாம்பன் புதிய ரயில் பாலத்தை  திறக்காவிட்டால் போராட்டம் 

பாம்பன் புதிய ரயில் பாலத்தை  திறக்காவிட்டால் போராட்டம் 

ராமநாதபுரம், : -பாம்பன் புதிய ரயில் பாலத்தை விரைவில் திறக்காவிட்டால் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என மாநில செயலாளர் பி.சண்முகம் தெரிவித்தார்.ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது:பாம்பன் புதிய ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டும் தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு என்ற பெயரில் தாமதம் செய்து வருகின்றனர். விரைவில் பாலத்தை திறக்காவிட்டால் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பாம்பன் பாலத்தில் போராட்டம் நடத்தப்படும்.த.வெ.க., விஜய்க்கு மத்திய அரசு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. அச்சுறுத்தல் இல்லாமல், அவர் கேட்காமல் தானாக பாதுகாப்பு வழங்குகிறது என்றால் ஏதோ பலனை எதிர்பார்த்துள்ளனர். பூரண மதுவிலக்கு எங்களது கொள்கை அல்ல. மதுவை சட்டம் போட்டு ஒழிக்க முடியாது. பொதுமக்களுக்கு இடையூறாக மதுபான கடைகள் இருந்தால் அப்புறப்படுத்த போராட்டம் நடத்தப்படும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவதாக அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி நடக்க வேண்டும். இல்லை என்றால் 2026 சட்டசபை தேர்தலில் அதன் பாதிப்பு எதிரொலிக்கும். எல்லை தாண்டும் மீனவர்கள் பிரச்னையில் இலங்கை நீதிமன்றம் வழங்கும் தண்டனை, அபரிமிதமான அபராதத் தொகையால் மீனவர்கள் பிரச்னை தீராது. தமிழக மீனவர்கள் என்று பார்க்காமல் இந்திய மீனவர்கள் என மத்திய அரசு பார்க்க வேண்டும். மீனவர்கள் பிரச்னையை நிர்வாக ரீதியாக பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

jayvee
பிப் 16, 2025 07:49

சொந்தமாக யோசிக்கும் திறனும் இல்லை.. மேலும் சீன திமுக என்று இரண்டு முதலாளிகளை வைத்துக்கொண்டு இந்த ஜென்மங்கள் படும் பாடு, படுத்தும் பாடு ..தேவையா இந்த அசிங்கம் உங்களுக்கு


முக்கிய வீடியோ