உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பள்ளி அருகே கூட்டமாக திரியும் நாய்களால் மாணவர்கள் அச்சம்

பள்ளி அருகே கூட்டமாக திரியும் நாய்களால் மாணவர்கள் அச்சம்

முதுகுளத்துார் : முதுகுளத்துார் பேரூராட்சி கீழரத வீதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே கூட்டமாக உலாவரும் நாய்களால் பள்ளி மாணவர்கள்,மக்கள் அச்சமடைகின்றனர்.முதுகுளத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் 50க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளது.இப்பகுதியில் கடந்த சில நாட்களாக தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தெருக்களில் கூட்டமாக நாய்கள் உலா வருவதால் மக்கள் அச்சப்படுகின்றனர்.இந்நிலையில் முதுகுளத்துார் கீழரத வீதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே 10க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டமாக திரிகின்றன. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். தனியாக நடந்து செல்பவர்களை அச்சுறுத்தும் வகையில் ஒன்று சேர்ந்து விரட்டுகின்றன. டூவீலரில் செல்பவர்களையும் தெருநாய்கள் விரட்டி கடிக்க பாய்கின்றன. இதனால் நடந்து செல்வதற்கே மக்கள் அச்சப்படுகின்றனர். பொதுமக்களை அச்சுறுத்தும் தெருநாய்களை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி