உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இளைஞர்கள் எழுச்சி தினத்தில் பனை விதை ஊன்றிய மாணவர்கள்

இளைஞர்கள் எழுச்சி தினத்தில் பனை விதை ஊன்றிய மாணவர்கள்

ராமேஸ்வரம், : முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி நேற்று ராமேஸ்வரம் அரசுப் பள்ளி மாணவர்கள் பனை விதைகளை விதைத்தனர்.முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள் இளைஞர்கள் எழுச்சி தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளி, விவேகானந்தா மெட்ரிக் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலத்தை நகராட்சி தலைவர் நாசர்கான் கொடியசைத்து துவக்கினார். மாணவர்கள் ஊர்வலமாக தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோயில் வரை சென்றனர். அங்கிருந்து தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் வரை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் 10 ஆயிரம் பனைமர விதைகளை நட்டனர்.ராமேஸ்வரம், பாம்பன், ஆர்.எஸ்.மங்களம் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கணேசபாண்டியன், மாரிபாண்டி, சுயம்புலிங்கம், விவேகானந்தா பள்ளி தாளாளர் சுவாமி நியமானந்தா, நகராட்சி துணைத் தலைவர் தட்சிணாமூர்த்தி, சமூக ஆர்வலர்கள் பழனிச்சாமி, தில்லைபாக்கியம், நல்லாசிரியர் ஜெயகாந்தன், பள்ளி என்.சி.சி., ஆசிரியர் பழனிச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை