ராமேஸ்வரத்தில் மாணவர்கள் கம்ப ராமாயணம் வாசிப்பு
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் மத்திய கலாச்சார துறை சார்பில் பள்ளி மாணவர்கள் கம்பராமாயணம் வாசிப்பு நிகழ்ச்சி நடந்ததுமத்திய கலாச்சாரத்துறை மற்றும் ராமேஸ்வரம் கம்பன் கழகம் இணைந்து நேற்று ராமேஸ்வரம் ராமகிருஷ்ணன் மடத்தில் மாணவர்கள் கம்ப ராமாயணம் வாசிப்பு நிகழ்ச்சி நடந்தது. இதன் மூலம் ராமாயணத்தின் வரலாற்றை மாணவர்கள் தெரிந்து கொண்டு இந்திய கலாச்சாரம், பண்பாட்டை அறிந்து கொண்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வாக இது அமைந்துள்ளது என அயோத்தி ராமர் கோயில் தர்ம அதிகாரி கமல்நபந்ததாஸ் மகராஜ் தெரிவித்தார்.ராமேஸ்வரம் ராமகிருஷ்ண மடம் நிர்வாகி சுவாமி நியமனந்தா, பா.ஜ., மாவட்ட தலைவர் முரளிதரன், ராமேஸ்வரம் கம்பன் கழக செயலாளர் நந்தகோபால், பொருளாளர் ராமு உட்பட பலர் பங்கேற்றனர்.