மானிய விலையில் படகு இன்ஜின்
தொண்டி: தொண்டி நாட்டுப்படகு மீனவர்களுக்கு மானிய விலையில் இன்ஜின் வழங்கப்பட்டது. கடலில் மீன்பிடிக்க செல்லும் நாட்டுப்படகு மீனவர்கள் பழைய மற்றும் திறன் குறைந்த இன்ஜின்களை பயன்படுத்துவதால் கரை திரும்புவதில் தாமதமும் எரிபொருள் செலவு அதிகரிப்பும் ஏற்பட்டு வந்தது. இதை கருத்தில் கொண்டு மீன்வளத்துறை மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ஆற்றங்கரை முதல் எஸ்.பி.பட்டினம் வரை 50 மீனவர்களுக்கு மானிய விலையில் இன்ஜின் வழங்க முடிவு செய்யப்பட்டது. இது குறித்து மீன்வளத்துறை அலுவலர்கள் கூறுகையில், முதல் கட்டமாக விண்ணப்பித்த தகுதியானவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. அதன்படி 50 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு10 பேருக்கு வழங்கப்பட்டது. மீதமுள்ள மீனவர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என்றனர்.