உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் இன்று சூரசம்ஹாரம்

பரமக்குடியில் இன்று சூரசம்ஹாரம்

பரமக்குடி: பரமக்குடி முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழாவையொட்டி இன்று(நவ.7) சூரசம்ஹாரம் நடக்கிறது. இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா நவ.2ல் காப்பு கட்டுதலுடன் துவங்கி நடக்கிறது. தரைப்பாலம் அருகில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தினமும் சுவாமி பல்வேறு அலங்காரங்களில் அருள்பாலிக்கிறார். நேற்று சக்திவேல் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில் இன்று மாலை முருகன் மயில் மீது ஏறி வீதி வலம் வந்து வைகை ஆற்றங்கரையில் சூரசம்ஹார லீலையில் அருள்பாலிக்க உள்ளார். இதே போல் பாரதி நகர் முருகன் கோயில் மற்றும் பால்பண்ணை அருகில் உள்ள முருகன் கோயில் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் விழா நடக்க உள்ளது. நாளை திருக்கல்யாண உற்ஸவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி