உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பெரிய கண்மாய்க்கு வைகை ஆற்றில் உபரி நீர்வரத்து: நீர்மட்டம் உயர்வு

பெரிய கண்மாய்க்கு வைகை ஆற்றில் உபரி நீர்வரத்து: நீர்மட்டம் உயர்வு

ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வைகை ஆறு உபரி நீர் வருவதால் கண்மாய் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.தமிழகத்தின் இரண்டாவது பெரிய கண்மாய் என்ற சிறப்பு பெயர் பெற்றது ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய். இந்த கண்மாய் முழு கொள்ளளவான 1205 மில்லியன் கன அடி தண்ணீரால் பெரிய கண்மாயின் கீழ் உள்ள 12,142 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த இந்த கண்மாய் பருவமழையால் மட்டுமே நிரம்புவது சாத்தியமற்றது. இதனால் பெரிய கண்மாய்க்கு வைகை ஆறு மற்றும் சூரியன் கோட்டை ஆறு மூலம் நீர் வரத்து கிடைக்கிறது. இந்நிலையில், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்திற்காக சில தினங்களுக்கு முன்பு வைகை அணை நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழையால்வைகை ஆற்றில் உபரியாக வரும் நீர் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு திருப்பி விடப்பட்டது. பெரிய கண்மாய்க்கு வைகை அணை நீர் வந்ததைத் தொடர்ந்து பெரிய கண்மாயில் நீர்மட்டம் தற்போது உயர்ந்துள்ளது. மொத்த கொள்ளளவான 5.5 அடியில் தற்போது 1.5 அடி தண்ணீர் தேங்கியுள்ளது. கண்மாயில் தற்போதுள்ள குறைந்த அளவு தண்ணீரால் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் விவசாயத்தை முழுமையாக காப்பாற்ற முடியுமா என்ற அச்சம் விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது.எனவே, வைகை ஆற்றில் கூடுதல் நீர் பெரிய கண்மாய்க்கு திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி