உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சர்வதேச கடல் எல்லையில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு

சர்வதேச கடல் எல்லையில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு

ராமநாதபுரம்: ''இந்திய- இலங்கை கடலோரத்தில் சர்வதேச கடல் எல்லையில் பாதுகாப்பு தொடர்பாக ட்ரோன் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது''என இந்திய காவல்படையின் கிழக்கு, வடகிழக்கு மண்டல கூடுதல் தலைமை இயக்குநர் டோனி மைக்கேல் தெரிவித்தார்.ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடலோர காவல் படை முகாமிற்கு வந்த டோனி மைக்கேல் கூறியதாவது:கடலில் நடைபெறும் சட்ட விரோத செயல்கள், போதைப் பொருள்கள் கடத்தலை தடுக்க இந்திய - இலங்கை கடலோர காவல் படை சார்பில் கூட்டு ரோந்து செல்ல ஆலோசனை நடக்கிறது. இருநாட்டு கடலோரங்களில் சர்வதேச கடல் எல்லை பகுதிகளில் பாதுகாப்பு தொடர்பாக 'ட்ரோன்' மூலம் கண்காணிக்கும் பணிகள் துவங்கப்படவுள்ளது. கடலோர காவல் படைக்கு 60 நவீன ரோந்து படகுகள் புதிதாக வரவுள்ளது.இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடற்பகுதிக்குள் செல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இது போன்ற செயல்களால் இரு நாடுகளுக்கும் பாதகம் ஏற்படும். மீனவ கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி எல்லை தாண்ட வேண்டாம் என அறிவுறுத்தி வருகிறோம். எண்ணெய் கப்பல்கள் விபத்தில் சிக்குவதால் கடல் வளம் பாதிக்கப்படுகிறது. அதனை பாதுகாக்க ரூ.100 கோடி மதிப்பீட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது என்றார்.இந்திய கடலோர காவல்படை சார்பில் ராமேஸ்வரம் கடல் பகுதியில் உள்ள முயல் தீவில் குடியரசு தினத்தை முன்னிட்டு முதன் முறையாக டோனி மைக்கேல் தேசியக்கொடி ஏற்றினார். முன்னதாக மண்டபத்தில் இருந்து ேஹாவர் கிராப்ட் கப்பல் மூலம் அங்கு சென்றார். அவர் கூறுகையில் ''இந்தியாவின் இறையாண்மையை நிலை நாட்டவும், ஆக்கிரமிப்பு, தீவிரவாத செயல்கள் நடந்து விடக்கூடாது என்பதற்காகவும் இந்த தீவு கண்காணிப்பில் உள்ளது.வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ள முதன் முறையாக தீவுகளில் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ